ஜெபம் PRAYER பிரன்ஹாம் கூடாரம், ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா 55-04-10E 1. எங்கள் பிதாவே, உம்மிடம் வருவதும், நாங்கள் எடுக்கப்பட்டதும், இயேசு வரத் தாமதிக்குமானால், ஏதோவொரு திரும்புவதுமாகிய மண்ணை நோக்கி எங்கள் தலைகளை மனத்தாழ்மையோடு தாழ்த்துவதும் உண்மையாகவே ஒரு சிலாக்கியமாய் உள்ளது. ஆனால், ஓ, எங்களுக்கு இருக்கிற இந்த மகிமையானதும் அற்புதமானதுமான நம்பிக்கைக்காக நாங்கள் எவ்வளவவாக உமக்கு நன்றி செலுத்துகிறோம், அந்த மண்ணானது ஏதோவொரு நாளில் அழியாமையைத் தரித்துக் கொள்ளும் என்றும், நாங்கள் அவருடைய சாயலுக்கு ஒப்பாக ஆக்கப்படுவோம். அப்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாங்கள் அவரை, அந்த அருமையானவரைக் காண்போம். எங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் மறுபடியும் உயிரோடு எழுந்தவரைக் காண்போம்; அவர் இப்பொழுது பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்து எங்களுடைய அறிககைகளின் பேரில் பரிந்து பேசிக் கொண்டு இருக்கிறார். அவருக்காக நாங்கள் எவ்வளவாக நன்றி கூறுகிறோம். 2. கர்த்தாவே, இந்தப் பழைய கூடாரமானது கரடுமுரடாக ஒழுங்கற்ற விதமாக இருக்கிற போதிலும், இந்த சபைக்காக, இந்தச் சிறு பழைய கூடாரத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். இந்த ஜனங்களில் சிலருடைய பிரயாசத்தின் மூலமாக, சில கான்கிரீட் செங்கற்பாளங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு வைக்கப்பட்டு இருக்கின்றன; இதற்கு உச்சியில் ஒரு சிறு கூரை இருக்கிறது; ஒரு சில இருக்கைகளும் உள்ளன. ஆனால், கர்த்தாவே, நீரோ உம்மைத் தாழ்த்தினீரே; அதைத் தான் எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவை எல்லாவற்றையும், நாங்கள் உமக்குக் விரும்பிக் கொடுத்திருப்பதன் நிமித்தமாக, இறங்கி வருகிறீர்: ஒவ்வொரு ஆராதனையிலும் உமக்கு வரவேற்பளிக்கும் ஒரு இடத்தை வைக்கிறோம். நீர் வந்து எங்களோடு பேசி, எங்களோடு சம்பாஷித்து, எங்களை ஆசீர்வதியும். நாங்கள் களிகூர்ந்து கொண்டே, சந்தோஷத்தோடு வீட்டிற்குப் போவோமாக. நாங்கள் வியாதியாக இருக்கும் போது, நீர் இங்கே எங்களைச் சந்தித்து, உமது சுகமாக்கும் கரத்தை எங்கள் மேல் வைத்தருளும்; அப்போது நாங்கள் சுகமடைவோம். ஓ, இவை எல்லாவற்றைக் குறித்தும் நாங்கள் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறோம்; நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். பிதாவே, நீர் தொடர்ந்து எங்களோடு கூட தங்கியிருக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். 3. இன்றிரவு, எங்கள் மேய்ப்பராகிய சகோதரன் நெவில் அவர்களுக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். கர்த்தாவே, நீர் அவர்களோடும், அங்கேயுள்ள அவருடைய சிறு குடும்பத்தோடும் கூட இருக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். தேவன் அவர்களை ஆசீர்வதிப்பாராக. எங்களால் இந்த... இருக்க முடியும்படியாகவும், வார்த்தையைச் சுற்றிலும், ஒருவரோடு ஒருவரிலும் உண்மையான ஐக்கியத்தைக் கொண்டிருக்க முடியும்படியாக, எங்களுடைய - எங்களுடைய பாதைகள் இங்கே பூமியின் மேல் கடந்து செல்லும்படி நீர் அனுமதிக்கும் இந்த நாளில் நாங்கள் ஜீவித்துக் கொண்டிருப்பதற்காக மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம். 4. கர்த்தாவே, சகோதரன்.தோம் அவர்களுக்காகவும், அவருடைய அருமையான சிறு குடும்பத்திற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்றிரவு இந்தக் கட்டிடத்தில் இருக்கும் மற்ற எல்லா ஊழியக்காரர்கள் மற்றும் குடும்பங்களுக்காக, எங்கிலுமுள்ள எங்கள் நண்பர்கள் எல்லாருக்காகவும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். வார்த்தையானது புறப்பட்டுச் செல்கையில், இப்பொழுது இன்றிரவு, எங்களை ஒருமித்து ஆசீர்வதியும்; அது தாமே அபிஷேகத்தோடு போவதாக, கர்த்தாவே. ஜீவனுள்ள வித்துக்கள் வேதாகமத்தை விட்டு வெளியே வருவதாக: "ஓ கர்த்தாவே, நான் உமக்கு விரோதமாய்ப் பாவம் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்." 5. அது தாமே இன்றிரவு புறப்பட்டுச் சென்று, தேவனுடைய வித்தானது ஒவ்வொரு இருதயத்திலும் நடப்படுவதாக. அது தாமே ஒரு மகத்தான, மகத்தான ஆராதனையை பிறப்பிப்பதாக. இதை அருளும், பிதாவே. இப்பொழுது எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னித்தருளும். எங்களை உமக்கு அருகில் கொண்டு வாரும், நாங்கள் உம்மைத் துதிப்போம். இயேசுவின் நாமத்தில், நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். *******